உக்ரைன் ரஷியாவிற்கு இடையே நடந்து வரும் போரால் மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்களை மீட்டு வருகிறது. இருப்பினும், உக்ரைனில் இருந்து தப்பித்து வர முடியாத சூழ்நிலையில் பல இடங்களில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
உக்ரைன்- ரஷியா இடையேயான மோதல் தொடர்வதால் மீட்பு பணியில் சிக்கல் தொடர்கிறது. உக்ரைன் எல்லையைவிட்டு இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்.
உக்ரைனில் இருந்து இதுவரை 10,400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியர்களை மீட்க 24 மணி நேரத்தில் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 16 விமானங்கள் இயக்கப்படும்.
மேலும், கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் தற்போது 5 பேருந்துகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இதைத்தவிர, கார்கிவ் நகரில் 300 பேரும், சுமி பகுதியில் 700 இந்திய மாணவர்களும் சிக்கியுள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள்.. பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு