உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷியா, கடந்த மாதம் 24-ம் தேதி அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது. 9-வது நாளான இன்றும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இந்நிலையில், மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் அகதிகளாக பிற நாடுகளுக்கு படை எடுக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக உக்ரைனின் மிகப்பெரிய நகரமான ஒடிசியில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், மனிதர்களை மட்டுமே காப்பாற்ற போராடும் சூழலுக்கு மத்தியில் தடைகளைத் தாண்டி விலங்குகளையும் காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் மல்கோர்சாடா கூறியதாவது:-
உக்ரேனில் ரஷிய தாக்குதலின்போது சிக்கித் தவித்த 6 சிங்கங்கள், புலிகள் உள்ளிட்ட விலங்குகளை டிரக்கில் ஏற்றிக்கொண்டு சுமார் 1000 கிலோமீட்டர் தூரம் சென்று எல்லை வழியே போலாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. விலங்குகளை அழைத்துவரும்போது ஏராளமான தடைகளை சந்தித்தோம். நேருக்கு நேர் சந்தித்த ரஷிய படைகளை தாண்டி விலங்குகளை போலாந்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் இவா ஸ்கிராப்சின்ஸ்காவும் விலங்குகளை வெளியேற்ற உதவினார். விலங்குகளை அழைத்துச் செல்ல விரும்பும் பல மேற்கத்திய அமைப்புகளுடன் ஏற்கனவே அவர் தொடர்பில் உள்ளார். போஸ்னன் உயிரியல் பூங்காவில் மீட்கப்பட்ட விலங்குகளை பராமரிக்க போதுமான நிதி இல்லாததால், நிதி திரட்டும் அமைப்பையும் தொடங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
பாகிஸ்தான் பள்ளிவாசலில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 30 பேர் பலி