ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்திய பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரன் போரின் மோசமான நாட்கள் இனி வர இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா இறுதி வரை போரை நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.சுமார் 90 நிமிடங்கள் போரை நிறுத்தும்படி வலியுறுத்திய பின்னரும் அதற்குப் பலன் கிடைக்காத நிலையில், புதின் உக்ரைன் நாடு முழுவதையும் கைப்பற்றத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறினார்.
இதனிடையே நேற்று காலை முதல் விமானங்கள் உக்ரைன் நகரங்களின் மீது குண்டுமழை பொழிந்து வருகின்றன. பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தலைநகர் கிவ்வை நோக்கி 30 கிலோமீட்டர் தூரத்துக்கு ரஷ்யாவின் பீரங்கிகளும் படைகளும் அணிவகுத்து நிற்கின்றன.