இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
தொடர்ந்து பல தினங்களாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் சந்தையானது, இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் இந்த ஏற்றம் தொடருமா?
ரஷ்யாவால் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படலாம்.. புட்டு புட்டு வைத்த எஸ்பிஐ அறிக்கை!
தொடர்ந்து உக்ரைன் -ரஷ்யா இடையேயான பதற்றமானது நீடித்து வருகின்றது. உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகமான ஓடேசாவினை கைபற்ற ரஷ்ய போர் கப்பல்கள் விரைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதே போல உக்ரைனின் முக்கிய நகரத்தில் ஒன்றான கெர்சனை கைபற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தைகள்
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மார்ச் மாதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்றும், அதற்கு ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில்தான், உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியிலும் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலேயே முடிவடைந்தன. இதன் எதிரொலியாக பெரும்பாலான ஆசிய சந்தைகளும் உச்சத்தில் காணப்படுகின்றன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றன.
முதலீடுகள் வெளியேற்றம்
ரஷ்யா – உக்ரைன் பதற்றம், சர்வதேச அளவிலான வளர்ச்சி பற்றிய கவலை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இதற்கிடையில் மார்ச் 2 நிலவரப் படி, இதில் 4,338.94 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள்,3061.70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 518.34 புள்ளிகள் அதிகரித்து, 55,987.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 65 புள்ளிகள் அதிகரித்து, 16,671 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 504.88 புள்ளிகள் அதிகரித்து, 55,973.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 160.40 புள்ளிகள் அதிகரித்து, 16,766.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1624 பங்குகள் ஏற்றத்திலும், 236 பங்குகள் சரிவிலும், 45 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் அனைத்தும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக் , நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, விப்ரோ, ஐஓசி, ஹெச்.சி.எல் டெக், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட் ராடெக் சிமெண்ட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, விப்ரோ, ஹெச்.சி.எல் டெக், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட் ராடெக் சிமெண்ட், கோடக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
10.19 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 57.49 புள்ளிகள் அதிகரித்து, 55,526.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 19.3 புள்ளிகள் அதிகரித்து, 16,625.25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது தற்போது ஏற்றத்தில் காணப்பட்டாலும், ஏற்ற இறக்கம் தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
opening bell: indices trade higher with nifty trade nearly 16,650
opening bell: indices trade higher with nifty trade nearly 16,650/உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை என்னவாகும்.. நீடிக்கும் குழப்பம்.. சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!