புதுடில்லி: உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
உக்ரைனில், ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ் நகரில், ரஷ்ய படைகளின் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. அதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மாணவர் குறித்த விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த சம்பவத்தை மத்திய அமைச்சர் விகே சிங் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெய்சங்கர் கலந்து கொண்டனர். இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது.
புதுடில்லி: உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.உக்ரைனில், ரஷ்ய படைகள் தொடர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.