ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று முற்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாற்றியுள்ளார்.
ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன்னை சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்தி சிக்கல்களுக்கு தீர்வு காணலாம் எனவும் ஜனாதிபதி இதன் போது சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரிடம் கூறியுள்ளார்.
எனினும் இது சம்பந்தமாக கட்சியினருடன் கலந்துரையாடி விட்டு, அது பற்றிய முடிவை பின்னர் அறிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அந்த மூத்த உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட நாடடில் தற்போது உருவாகியுள்ள நிலைமைகள் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்து வருகிறது.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அந்த கட்சியின் பிரதிநிதிகள் நாட்டின் நிலைமை சம்பந்தமான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்த மாநாட்டில் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஆற்றிய உரைகள் காரணமாகவே அவர்களை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.