எம்.டி., – எம்.எஸ்., படிப்பிற்கு இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி-முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.எம்.டி., – எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பித்த தகுதியான மாணவர்களின் பட்டியலை, அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என பிரிவு வாரியாக சென்டாக் வெளியிட்டுள்ளது.இம்மாணவர்களுக்கு இன்று 4ம் தேதி கணினி கலந்தாய்வு மூலம் சீட் ஒதுக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்படாத மாணவர்களுக்கு பதிவு கட்டணம் திருப்பி தரப்படும். சீட் ஒதுக்கீடு கிடைத்து கல்லுாரியில் சேராவிட்டால் பதிவு கட்டணம் திருப்பி தரப்படாது. இரண்டாவது கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டால், முதற்கட்ட கலந்தாய்வில் கிடைத்த சீட் ரத்தாகி விடும்.பெற்றோர் சங்கம் கோரிக்கைபுதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:எம்.டி.., எம்.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள புதுச்சேரி மாணவர்கள், 10 பேர், அகில இந்திய மருத்துவ தொகுப்பில் இடம் கிடைத்து, கல்லுாரிகளில் சேர்ந்து விட்டனர்.மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ கமிட்டி விதிப்படி இம்மாணவர்களின் பெயர்களை நீக்கியிருக்க வேண்டும்.அவ்வாறு செய்யாமல் அந்த மாணவர்களின் பெயர்களோடு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.