எலான் மஸ்க்-ஐ மிரட்டிய ஃபோர்டு நிறுவனம்.. நடந்தது என்ன தெரியுமா..?!

சர்வதேச ஆட்டோமொபைல் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் டெஸ்லாவுக்குப் போட்டியாகப் போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை அதிகப்படியான தொகையை முதலீடு செய்து பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார்களை வெளியிட முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் எலான் மஸ்க்-ஐ போர்டு நிறுவனம் மிரட்டிய கதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. 50 வயதில் செய்யும் வேலையா இது..!

 போர்டு நிறுவனம்

போர்டு நிறுவனம்

டெஸ்லாகவுக்குப் போட்டியாக எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கவும், வர்த்தகத்தை உருவாக்கவும் திட்டமிட்டு இருக்கும் போர்டு நிறுவனம் தனது மொத்த வர்த்தகத்தையும் இரண்டாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் கார் உற்பத்தி, வர்த்தகத்தை ஒரு பிரிவாகவும்.

 எலக்ட்ரிக் கார் தயாரிப்பு

எலக்ட்ரிக் கார் தயாரிப்பு

எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, திட்டமிடல், வர்த்தகம், வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகிய பணிகளை நிர்வாகம் செய்ய ஒரு பிரிவாகவும் பிரிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பை தனிப்பட்ட முறையிலும், அதிகப்படியான கவனத்துடனும் நிர்வாகம் செய்ய முடியும் எனப் போர்டு நம்புகிறது.

 50 பில்லியன் டாலர் முதலீடு
 

50 பில்லியன் டாலர் முதலீடு

ஏற்கனவே போர்டு நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காகச் சுமார் 30 பில்லியன் டாலரை முதலீடு செய்யவதாக அறிவித்த நிலையில் தற்போது 2026ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாகப் போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜிம் பார்லே தெரிவித்துள்ளார்.

 Ford Blue - Ford Model e

Ford Blue – Ford Model e

மேலும் தற்போது பிரிக்கப்பட்டு உள்ளகு இரு பிரிவுகளுக்கு இரு பெயர்களையும் போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜிம் பார்லே வைத்துள்ளார். IC இன்ஜின் கொண்ட கார்களைத் தயாரிக்கும் பிரிவுக்கு Ford Blue என்றும், எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் பிரிவுக்கு Ford Model e என்ற பெயரை வைத்துள்ளது.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

Model E என்ற பெயரை கேட்டால் கட்டாயம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்-கிற்குத் தூக்கம் வராது. எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு SEXY எனப் பெயர் வைத்துக் கார்களை அறிமுகம் செய்ய விரும்பினார். அதனாலேயே டெஸ்லா கார்களுக்கு மாடல் எஸ், மாடல் எக்ஸ், மாடல் Y எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

 Model E

Model E

இதில் மாடல் ஈ என்ற பெயரை ஏற்கனவே போர்டு கைப்பற்றி இருந்தது எலான் மஸ்க்-கிற்குத் தெரியாது. இந்த நிலையில் 2014ல் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், டெஸ்லா நிறுவனத்தின் அடுத்த மாடலின் பெயர் என்ன எனக் கேட்டபோது எலான் மஸ்க் மாடல் ஈ எனத் தெரிவித்தார்.

 வழக்கு

வழக்கு

இந்தப் பேட்டி வெளியான நிலையில், போர்டு நிறுவனம் எலான் மஸ்க்-ஐ நேரடியாகத் தொலைப்பேசியில் அழைத்து Model E -க்கு நாங்கள் டிரேட்மார்க் வாங்கியுள்ளோம், இதையும் மீறி நீங்கள் பெயரை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்போம் என மிரட்டினர். இதனால் எலான் மஸ்க Model E பெயரை Model 3 ஆக மாற்றினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ford Motor threatening Elon Musk to sue if Using Model E Name; Do you know Why?

Ford Motor threatening Elon Musk to sue if Using Model E Name; Do you know Why? எலான் மஸ்க்-ஐ மிரட்டிய ஃபோர்டு நிறுவனம்.. நடந்தது என்ன தெரியுமா..?!

Story first published: Friday, March 4, 2022, 16:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.