புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தில் உள்ள 5 சதவீத பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை செபியிடம் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், ரூ.63 ஆயிரம் கோடி நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 11ம் தேதி எல்ஐசி.யின் பங்குகள் விற்பனை தொடங்கும் என்று செய்திகள் வெளியானது.இந்நிலையில், ‘உக்ரைன் – ரஷ்யா போரால் பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள ஊசலாட்டமான போக்கு, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையற்ற தன்மை ஆகியவற்றால் எல்ஐசி பங்குகள் விற்பனை அடுத்த நிதியாண்டுக்கு தள்ளி போகலாம்’ என பெயர் கூற விரும்பாத உயரதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.