பெங்களூரு: காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு ரூ.1000 ேகாடி ஒதுக்கி கர்நாடக முதல்வர் பட்ஜெட்டை முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். மாநில சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடப்பதால், புதியதாக எந்த வரியும் சுமத்தாமல், ‘நவீன இந்தியாவிற்கான புதிய கர்நாடகம்’ என்ற தொலைநோக்கு பார்வையுடன் மக்களை கவரும் பல்வேறு சலுகைககளை அறிவித்துள்ளார். மாநிலத்தில் செயல்படுத்தி வரும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுத்துள்ள முதல்வர் பொம்மை, ‘கிருஷ்ணா மேலணை திட்டங்களுக்கு தலா ரூ.5,000 ேகாடி, களசா-பண்டுரி கால்வாய் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி, பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.3,000 கோடி, எத்தினஹோளே நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு உள்பட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் பசவராஜ் பொம்மை வெளிட்டுள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.