சாம்ராஜ் நகர் : கல் குவாரியில் பாறைகள் உருண்ட விபத்தில், நான்கு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆறு பேரை காணவில்லை; அவர்களை தேடும் பணி நடக்கிறது.சாம்ராஜ் நகரின் குண்டுலுபேட் அருகே உள்ள பொம்மலாபுரா கிராமத்தை சேர்ந்த மகேந்திரப்பா என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இதில், கேரளாவை சேர்ந்த ஹகீம், 45, என்பவர் ஐந்து ஆண்டுக்கு குத்தகை பெற்று கல் குவாரி நடத்தி வருகிறார்.இங்கு ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பாறைகள் உருண்டு விழ ஆரம்பித்தன. இந்த பாறைகள் தொழிலாளர்கள், டிப்பர், ஜே.சி.பி., மீது விழுந்தன. இதில், பாறைகளின் அடியில் 10 பேர் சிக்கியதாக கூறப்பட்டது. இவர்களில் நான்கு பேர் மீட்கப்பட்டனர். ஆறு பேரை காணவில்லை; அவர்களை தேடும் பணி நடக்கிறது. ஆறு டிப்பர்கள், ஜே.சி.பி.,யும் சேதம் அடைந்தன.
சாம்ராஜ் நகர் : கல் குவாரியில் பாறைகள் உருண்ட விபத்தில், நான்கு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆறு பேரை காணவில்லை; அவர்களை தேடும் பணி நடக்கிறது.சாம்ராஜ் நகரின் குண்டுலுபேட் அருகே
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.