
குடும்பத்துடன் தாஜ்மகாலுக்கு சென்ற செல்வராகவன்
சாணிக்காயிதம், பீஸ்ட் படங்களில் நடித்துள்ள இயக்குனர் செல்வராகவன் தற்போது தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது தனது மனைவி கீதாஞ்சலி மற்றும் பிள்ளைகளுடன் தாஜ்மஹாலுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார் செல்வராகவன். மனைவி, பிள்ளைகளுடன் தாஜ்மஹாலின் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துள்ளார் அந்த புகைப்படங்களை கீதாஞ்சலி வெளியிட்டுள்ளார்.