கோவை மேயராக இன்று கல்பனா ஆனந்த்குமார் பதவியேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் நேற்று வார்டு கவுன்சிலர் பதவி ஏற்ற நிலையில், இன்று மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மேயராக கல்பனா ஆனந்த் குமார் வெற்றி பெற்று பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் கோவை மாநகர மேயராக பதவி ஏற்ற கல்பனா ஆனந்த் குமார் போட்ட முதல் கையெழுத்தில் கழிப்பறைகள் இல்லாத மாநகராட்சி பள்ளிகளில் உடனடியாக கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவருடைய இந்த முதல் கையெழுத்து பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.