Tamilnadu Admk News Update In tamil : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து கட்சியில் சசிகலாவுக்கு உண்டான ஆதரவு பெருகி வரும் நிலையில், திருச்செந்தூரில் இன்று ஒபிஎஸ் தம்பி ஒ ராஜா சசிகலாவை நேரில் சந்தித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிலதா இறந்ததில் இருந்து அதிமுகவில், ஒபிஎஸ் இபிஎஸ் ஒரு அணியிலும் சசிகலா தனி அணியிலும், இருந்து வரும் நிலையில், இவர்களுக்குள் வெளிப்படையான மோதல் இருந்து வருகிறது. மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதில் தொடங்கிய போட்டி தற்போதுவரை நீடித்து வருகிறது.
இதனிடையே சசிகலாவை சந்திக்கும் அதிமுக பிரமுகர்கள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வந்தாலும், அவரை சந்திக்கும் அதிமுக நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அதிமுக சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது.
இதனால் அதிமுகவில் சசிகலாவுக்காக ஆதரவு பெருகி வரும் நிலையில், கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தில் சசிகலா மீண்டும் கட்சியின் இணைய வேண்டும் என்றும், டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த தீர்மானம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த 6 அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்நிலையில், முகமது ஹெரிப், சேகர், ஸ்ரீதர் பி சங்கர், மஸ்தான், டாக்டர் யோகேஷ்வரன், ராஜாராணி உள்ளிட்ட 6 பேரும் கழகத்தின் கொள்கை, குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான செய்பாட்டதாலும், கழகத்தின் கன்னியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி களங்களும், அவப்பெயரும், உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும், இன்று முதல் கழகத்தின் அடிப்படி உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/LXr00rvt6l
— AIADMK (@AIADMKOfficial) March 4, 2022
இவர்களுடன் கழக உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்க்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“