புதுடில்லி,-இந்தியாவில், 2020ல், ‘யு டியூப் சேனல்’கள் நடத்துவோரால், நாட்டிற்கு, 6,800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
நம் நாட்டில், யு டியூப் சமூக வலைதளத்தில், தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி, அதில், ‘வீடியோ’க்களை பதிவிட்டு, பணம் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், 2020ல், யு டியூப் சேனல்களால், 6,800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து, ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை: படிப்பு, சமையல், தொழில்நுட்பம், விளையாட்டு என பல துறைகள் தொடர்பான தகவல்கள், மக்களிடம் எளிதில் சென்றடைய, யு டியூப் உதவியாக உள்ளது.இந்தியாவில், யு டியூப் சேனல்கள் நடத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான, ‘சப்ஸ்கிரைபர்’கள் எனப்படும் பின் தொடர்வோரை வைத்திருந்த சேனல்களின் எண்ணிக்கை, 2020ல் 4,000 என்ற அளவில் இருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட, 45 சதவீதம் அதிகமாகும்.இந்த யு டியூப் சேனல்களால், நாட்டிற்கு 6,800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 6.83 லட்சம் வேலைவாய்ப்புகளையும் இவை உருவாக்கி உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement