சிக்கிவிடக்கூடாது… சொந்த போர்க்கப்பலை கடலில் மூழ்கடித்த உக்ரைன்!


ரஷ்யர்கள் கையில் சிக்கிக்விடக்கூடாது என்பதற்காக உக்ரைன் அதன் போர்க்கப்பலை கடலில் மூழ்கத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து 9 நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷய் படைகள், பல பகுதிகளில் உக்ரைன் ராணுவ உடையில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதன் முக்கிய போர்க்கப்பலான Hetman Sahaidachny கடலில் மூழ்கடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் Mykolaiv நகரில் உள்ள கடற்கரையில் வைத்து Hetman Sahaidachny கப்பலில் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இதனிடையே, Mykolaiv நகரில் ரஷ்யா அதன் தாக்குதலை தீவிப்படுத்தியுள்ளது.

எனவே, Hetman Sahaidachny போர்க்கப்பல் எதிரிகள் கையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, கப்பலின் தளபதி அதை கடலில் மூழ்கடிக்க உத்தரவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் Oleksiy Reznikov மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதை உறுதிப்படுத்தும் வகையில், போர் கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் புகைப்படும் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.