கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்கு சந்தையானது பெரும் ஆட்டத்தினை கண்டு வருகின்றது. அதிலும் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கிய பின்பு மீண்டும் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றது.
இந்த நிலையில் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தினை கண்டுள்ளனர். எனினும் நீண்டகால முதலீடுகள் லாபகரமானதாகவே பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது சனோஃபி இந்தியா நிறுவனம் பற்றித் தான். இது இந்த நெருக்கடியான கட்டத்திலும் அதன் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய சர்பிரைஸ்-னினை கொடுத்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக சீனா எடுத்த முடிவு.. ஷாக்கான புதின்..!
சனோஃபி இந்தியா டிவிடெண்ட்
சனோஃபி இந்தியா நிறுவனம் ஒரு பங்குக்கு 490 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இந்த ஸ்பெஷல் டிவிடெண்டினை நிறுவனம் வருடாந்திர கூட்டத்தில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பிஎஸ்இ-க்கு தாக்கல் செய்த அறிக்கையில், சனோஃபி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இறுதி டிவிடெண்ட் மற்றும் வருடாந்திர கூட்டம் காரணமாக ஏப்ரல் 16 , 2022 முதல் ஏப்ரல் 26,2022 வரை உறுப்பினர்களின் பதிவும் மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் மூடப்பட்டிருக்கும். நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் ஏப்ரல் 26 அன்று நடைபெறவுள்ளது. என தெரிவித்துள்ளது.
இன்றைய பங்கு விலை?
இன்று சனோஃபி இந்தியா பங்கு விலையானது கிட்டதட்ட 1% குறைந்து, என்.எஸ்.இ-யில் 7179.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 7251.95 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 7155.90 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 9285 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 6945 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-ல் பங்கு விலையானது கிட்டதட்ட 1% குறைந்து, 7188.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 7240 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 7166.30 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 9300 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 6949.35 ரூபாயாகும்.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்?
11.33 நிலவரப்படி, சென்செக்ஸ் 959.3 புள்ளிகள் குறைந்து, 54,143.38 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 294.65 புள்ளிகள் குறைந்து, 16,203.40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. முன்னதாக 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்ட சந்தை, தற்போது சற்றே ஏற்றம் கண்டுள்ளது.
விலை அதிகரிக்கும்
சனோஃபி இந்தியா பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் இலக்கு விலையாக 8107 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளனர். இதன் தற்போதைய விலை 7179 ரூபாய் என்ற லெவலில் உள்ளது.
நிறுவனம் பற்றி
சனோஃபி இந்தியா நிறுவனம் 1956ல் நிறுவப்பட்ட நிறுவனமாகும். இது மருத்துவ துறையில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் சந்தை மதிப்பு 16790.24 கோடி ரூபாயாக இருக்கும். மக்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களில் கவனம் செலுத்தி வருகின்றது. இதில் பல முக்கிய பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பல தயாரிப்புகளையும் கொண்டுள்ளது.
நிதி அறிக்கை
இந்த நிறுவனம் டிசம்ப ர் 2021 காலாண்டில் மொத்த வருமானம் 704.20 ரூபாயாகும். இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்பீது 8.45% சரிவாகும். இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 4.39% சரிவினையும் கண்டுள்ளது. இதற்கிடையில் நிகர லாபம் 90.40 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
pharma company to give Rs.490 dividend per share, analyst expect upside
pharma company to give Rs.490 dividend per share, analyst expect upside/சூப்பர் சான்ஸ்.. ரூ.490 டிவிடெண்ட்.. பங்கு விலையும் அதிகரிக்கலாமாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?