சென்னைக்கு வந்த ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்.. டாடா கொடுத்த ஐடியா..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை ஓரம்கட்டிவிட்டு வேகமாக வளர்ந்து வரும் அனைத்து துறையிலும் தொடந்து முதலீடு செய்து தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியா பொருளாதாரம் இனி வரும் காலகட்டத்தில் ஏற்றுமதியை நம்பி பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளதால் உலகம் முழுவதும் எப்போதும் டிமாண்ட் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களமிறங்கியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – Sanmina SCI

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிப்பதற்காக அமெரிக்காவின் Sanmina Corporation நிறுவனத்துடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. Sanmina Corporation நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனமான Sanmina SCI இந்தியா நிறுவனத்தில் சுமார் 1670 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்து ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிசினஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RSBVL) சுமார் 50.1 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

 சென்னை ஒரகடம்

சென்னை ஒரகடம்

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்காகத் தொழிற்சாலை அமைக்க ஏற்கனவே Sanmina சென்னை ஒரகடத்தில் சுமார் 100 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி ஹைய் டெக் உற்பத்தி தளத்தை நிறுவியுள்ள நிலையில் இப்புதிய முதலீடு மூலம் உற்பத்தி மற்றும் விரிவாக்க பணிகளை விரைவில் துவங்க உள்ளது.

 சென்னை
 

சென்னை

இந்தியாவில் Sanmina நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. இதனால் இந்த முதலீட்டின் மூலம் செய்யப்படும் விரிவாக்க பணிகளை அனைத்தும் சென்னையில் மட்டுமே செய்யப்பட உள்ளது. புதிய தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இப்போது இல்லை என Sanmina சென்னை நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

இதன் மூலம் சென்னை Sanmina தொழிற்சாலையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாகும் என்பது முக்கியமான தகவல். சென்னை Sanmina தொழிற்சாலையில் 1670 கோடி ரூபாய் முதலீடு செய்தது மூலம் ரிலையன்ஸ் தனது 5ஜி கனவு திட்டத்திற்காகத் தேவைகளை எளிதாகப் பூர்த்திச் செய்துகொள்ள முடியும்.

 எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி

5ஜி சேவைக்குத் தேவையான டெக் இன்பரா, கம்யூனிகேஷ்னஸ் கருவிகள், மெடிக்கல் மற்றும் ஹெல்த்கேர் கருவிகள், கிளீன் டெக் சேவைகளுக்குத் தேவையான பொருட்களையும் இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 டாடா குழுமம்

டாடா குழுமம்

சமீபத்தில் டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதற்காக ஒசூரில் பெரும் முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. டாடா-வின் இத்திட்டம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாடாவின் வருகைக்குப் பின்பு ஒசூர் தமிழ்நாட்டின் முக்கியத் தொழிற்சாலை நகரமாக மாறியுள்ளது

 1 டிரில்லியன் டாலர்

1 டிரில்லியன் டாலர்

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் அளவிலான வர்த்தக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் டாடா குழுமத்தை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் களமிறங்கியுள்ளது.

 புதிய வர்த்தகம்

புதிய வர்த்தகம்

இதுவும் டாடா-வை போலவே தமிழ்நாட்டில் உற்பத்தி தளம் கொண்ட நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீடு செய்துள்ளது கூடுதல் சிறப்பு. தொடர்ந்து புதிய வர்த்தகம் மற்றும் துறையில் முதலீடு செய்து வரும் ரிலையன்ஸ்க்கு இது Sanmina ஆச்சரியம் இல்லை.

 ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்

மேலும் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே ஜியோபோன் மற்றும் அதற்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. அதேபோல் ஆந்திரப் பிரதேசத்திலும் (திருப்பதி) கூட்டணி உற்பத்தி தளத்தைக் கொண்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance JV with Sanmina for electronics manufacturing in Chennai; Is Mukesh Ambani Following TATA footsteps

Reliance JV with Sanmina for electronics manufacturing in Chennai; Is Mukesh Ambani Following TATA footsteps சென்னைக்கு வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்.. டாடா கொடுத்த ஐடியா..!

Story first published: Friday, March 4, 2022, 9:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.