நேற்று திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்தது, அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தனர்.
இன்று மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.
சிபிஎம் வேட்பாளரை அடைத்து வைத்து திமுகவினர் அராஜகம்#theekkathir |#dmk |#cpim |#cpm pic.twitter.com/3ukkmzKaaF
— Theekkathir (@Theekkathir) March 4, 2022
இதற்கிடையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவராக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார்.
திமுக தலைமையின் பேச்சை மதிக்காமல் கீழ்மட்டத்தில் இருக்கும் திமுக நிர்வாகிகள் சிபிஎம் தலைவர்களை சிறைபிடித்து, தேர்தல் அதிகாரிகளின் ஆதரவுடன் தோல்வியடையச் செய்து, திமுக வேட்பாளரான விஸ்வ பிரசாத்தை வெற்றி வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.