ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்ஜீவ் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் பொறுப்பு ஏற்கிறார்.
இதுகுறித்து ஜலான்-கல்ராக்கின் முன்னணி பங்குதாரர் முராரி லால் ஜலான் கூறுகையில், ” மனித மூலதனத்தில் முதலீடு செய்வதை நான் எப்போதும் நம்புகிறேன். சஞ்ஜீவ் கபூர் ஒரு அனுபவமிக்க விமானப் பணியாளர். சஞ்ஜீவ் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், விபுலா சிஎஃப்ஓவாகவும் இருப்பதன் மூலம், ஜெட் ஏர்வேஸ் இழந்த அதன் பெருமையை மீட்டெடுக்கும். அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் என்று உறுதியாக நம்புகிறேன் ” என்றார்.
மேலும், இதுகுறித்து சஞ்ஜீவ் கபூர் கூறியதாவது:-
நான் விமானப் போக்குவரத்துக்குத் திரும்புவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜெட் ஏர்வேஸ் மூன்று வருடங்களாக செயல்படவில்லை என்றாலும், அது இன்னும் விசுவாசமான வாடிக்கையாளர்கைளக் கொண்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது மீண்டும் வானத்தை நோக்கிச் செல்லும்.
டிஜிட்டல் யுகத்திற்கான மக்களை மையமாகக் கொண்ட விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸை வாடிக்கையாளர் சார்ந்த விமான சேவையாக மீண்டும் கட்டமைக்கும் பொறுப்பை எதிர்நோக்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கேரளாவில் டாட்டூ வரைவதாக கூறி இளம் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கலைஞர் மீது புகார்