தெற்கு உக்ரைனின் முக்கிய நகரமான மிக்கலேவ்வையும் கைப்பற்றிய ரஷ்யா| Dinamalar

கீவ்: தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகரையும் ரஷ்யா கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் பயங்கரமான தாக்குதல் நடத்துகிறது. இதனால், பல பகுதிகளில் குடியிருப்புகள், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே கெர்சன், எனர்கோடர் நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது.

latest tamil news

இதனைத் தொடர்ந்து தற்போது தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள், அந்த நகரையும் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ஆதிக்கம் தொடர்ந்து வருவதால், மேலும் சில நகரங்களை கைப்பற்றும் எனத் தெரிகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.