தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் அமமுக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 இடங்களிலும் அமமுக 6 இடங்களிலும் அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பழனிசெட்டிப்பட்டி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் பவானியும் அமமுக சார்பில் மிதுன் சக்கரவர்த்தியும் போட்டியிட்டனர்.
தலைவர் பதவியை கைப்பற்ற 8 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுக மற்றும் அமமுக இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், ஒரு அதிமுக கவுன்சிலரின் ஆதரவுடன் அமமுக வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தி, 8 வாக்குகள் பெற்று தலைவர் பதவியை கைப்பற்றினார்.