வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 6 மற்றும் 7-ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வரை தரைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால், தென்மேற்கு வங்கக் கடல் மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM