வாரணாசி:
உத்தர பிரதேசத்தில் கடைசி கட்ட தேர்தல் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. பிரதமர் மோடி இன்று மதியம் மிர்சாபூரில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், போர் நடைபெறும் உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை ஆபரேசன் கங்கா திட்டத்தின்கீழ் மீட்கப்பட்டு அழைத்து வந்திருப்பதாகவும், அங்கு சிக்கித்தவிக்கும் மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பரம்பரை வம்சங்கள் மற்றும் மாஃபியாவாதிகளை உத்தரபிரதேச வாக்காளர்கள் தோற்கடித்து பாஜக அரசாங்கத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் வாரணாசியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அதன் ஒரு பகுதியாக மால்தாகியா சவுக் பகுதியில் இருந்து வாகன பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.