பெட்ரோல் விலை உயர வாய்ப்பு; கலால் வரியை குறைக்க அரசு ஆலோசனை| Dinamalar

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்காமல் இருக்க, கலால் வரியை குறைப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.

இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலக சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, இழப்பை சமன் செய்ய, எண்னெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை அதிகரிக்கக்கூடும்.

அப்படி அதிகரிக்கும்போது, மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கும் வகையில், கலால் வரியை குறைப்பது குறித்து அரசு சிந்தித்து வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.