லம்பேல்பட்:
ஐந்து மாநில தேர்தலில் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வாரம் நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
இன்று ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு மையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணி மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள்…பிரதமர் மோடி பொய்யின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கிறார்: ராகுல் காந்தி