தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.
ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து, வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் நேற்று கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இன்று மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மதிமுக முறைமுக தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,
மாநகராட்சி துணை மேயர்
திருவள்ளுர் மாவட்டம் – ஆவடி – எஸ் சூரியகுமார்
நகராட்சி தலைவர்
கட்சிபுரம் மாவட்டம் – மாங்காடு – சுமதி முருகன்
நகராட்சி துணைத் தலைவர்
1.இராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி – கே.ஏ.எம்.குணா (எ) குணசேகரன்
2.தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி – ஆர்.எஸ்.இரமேஷ்
3.கரூர் மாவட்டம் – குளித்தலை – கே.கணேசன்
பேரூராட்சி தலைவர்
தென்காசி மாவட்டம் -திருவேங்கடம் – த. பாலமுருகன்
தஞ்சாவூர் மாவட்டம் – ஆடுதுறை – இரா. சரவணன்
ஈரோடு மாவட்டம் – சென்னசமுத்திரம் – கு. பத்மா
பேரூராட்சி துணைத் தலைவர்
திண்டுக்கல் மாவட்டம் – பாளையம் – வி.லதா
ஈரோடு மாவட்டம் – அவல்பூந்துறை – லோ.சோமசுந்தரம்
ஈரோடு மாவட்டம் – அரச்சலூர் – ச.துளசிமணி