மார்ச் 4ஆம் 5 ஆம் திகளில் Western Breeze களியாட்ட நிகழ்வு

மேல்மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Western Breeze களியாட்ட நிகழ்வு, மார்ச் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் கொழும்பு கடலோரப் பாதை (Marine Drive) கொள்ளுப்பிட்டி பகுதியில் நடைபெறவுள்ளது.

மார்ச் 4, 5 ஆகிய திகதிகளில் மாலை 5.00 மணி முதல் நள்ளிரவு வரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் மார்ச் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த களியாட்ட நிகழ்வில், நட்சத்திர ஹோட்டல்கள், முதற்தர உணவகங்கள், நேரடி இசை நிகழ்வுகள், வானவேடிக்கை காட்சிகள், உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான விசேட விளையாட்டுப் பகுதி என்பன இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மேல் மாகாண சுற்றுலா சபையினால் ஆரம்பிக்கப்படவுள்ள ஹோட்டல் பாடசாலைக்கு பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.