தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 3-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘இன்றைய அதிமுகவுக்கு சசிகலாவின் தேவை… அவசியமா? இல்லையா?’ எனக் கேட்டிருந்தோம்.
இதற்கு வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே!
சக்திகனேஷ்
ஆனால் ஒரு ராஜரிஷி போல வேண்டும். மகாராணிபோல் இருக்ககூடாது. அதிமுகவுக்கு தேவை பெரிய ராஜதந்திரிதான். ஏற்கனவே இரண்டு ராஜாக்கள் உருவாகிவிட்டார்கள். குழப்பம் ஏற்படக்கூடாது
Advice Avvaiyar
இவர் இருந்திருந்தாலும்,இனி வருவதாலும் மாற்றமே இருக்காது. இவர்கள் மேல் உள்ள வெறுப்பு + தி.மு.க வின் மேல் உள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பில் வந்து ஸ்ட்ராங்காக அமர்ந்து இருப்பதால், அடுத்த முறையும் தி.மு.க வே வருவதை தடுக்கவோ,தவிர்க்கவோ முடியாது.மாறி மாறி வருவது மக்களுக்கு நல்லது தானே?
Subbu Lakshmi
சசிகலா ஜெயலலிதாவை முன்னிறுத்தி காரியத்தை சாதித்தவர். அவருக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு மக்களிடம் கிடையாது. அதிமுக அரசியல்வாதிகள் தன்னுடைய சுய லாபத்திற்கு அவரை பயன்படுத்திக் கொண்டார்கள்.
வே. சக்திவேல்
அது மக்களுக்கு தேவை இல்லை. மக்களில் ஒருவனாக இது அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பது தான் கருத்து.
Sumathi Sumathi
அரசியலில் எந்த பொருப்பிலும் இல்லாத சசிகலா மீது ஏகப்பட்ட ஊழல், ஏகப்பட்ட சொத்து குவிப்பு. அரசியலுக்கு வந்தால் இன்னும் மோசம்.
க.வீர செல்வம்
ஒரு கவர்ச்சிகரமான தலைமை இல்லாமல் அதிமுக தடுமாறுவது நன்றாகவே தெரிகிறது…எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா போன்ற அட்ராக்டிவ் தலைவர்களாலேயே வளர்ந்த இயக்கம் அது. ஆனால் அது போன்ற தலைமை இல்லாமல் தடுமாறுகிறது..தொண்டர்களும் வேறு வழி இல்லாமல் ஏதோ வலுக்கட்டாயமாக அதில் இருந்து வருகின்றனர். வரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் அதிமுகவின் நிலமை கவலைக்கிடமாகிவிடும்…எனவே ஒரு இயக்கம் வாழவேண்டுமானால் சில தியாகங்களையும்…செய்தே ஆகவேண்டும் இன்றைய சூழ்நிலையில் சசிகலாவின் வருகை அந்த இயக்கத்திற்கு வலு சேர்க்கும்.ஆனால் அதே நேரம் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள சில பழிச்சொற்கள் மக்கள் மனதில் பதிந்துள்ளது ஒரு மைனஸ் பாய்ண்ட் ஆகும்!எது எப்படியோ ஜெயலலிதாமீதும் இதே போன்ற பழிச் சொற்கள் வீசப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்..பின்நாளில் தொண்டர்களும்,மக்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். அதே போன்றதொரு மாற்றம் வரவும் வாய்ப்புள்ளது.எல்லாவற்றிற்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
சி.முருகானந்தம் தமிழன்டா
சசிகலா தேவையானு சொல்வதை விட அமுமுக என்ற இயக்கம் தனித்து போட்டியிடுவதால் பாதிப்பு அதிமுகவுக்கு தான் அதனால ஒரே இயக்கமாக அதிமுக மீண்டும் மாற வேண்டும் அதுதான் அதிமுக தொண்டர்களின் விருப்பம்
Palanikumar
முதலில் கட்சியை ஆரம்பித்த தலைவர் படத்தை போஸ்டர், பேர்களில் பெரிதாக போட்டு மற்ற படங்களை தவிர்த்து விளம்பரங்கள் செய்து வாக்கு கேளுங்கள்… பிறகு தானாகவே இலை துளிர்க்கும்…தலைவனை மதிக்காமல் எவரை சேர்த்தாலும் நீக்கினாலும் கட்சி வளர வாய்ப்பில்லை
குறிப்பு: இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதளபக்கங்களில் பகிரப்படும்.
சமீபத்திய செய்தி: போர்க்களத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டினவரை மீட்க பேருந்துகள் தயார்: ரஷ்யா தகவல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM