உக்ரைனில் ரஷ்ய ராணுவம் திட்டமிட்டபடி முன்னேறிச் செல்வதாக தெரிவித்த அதிபர் புதின், மனிதாபிமான உதவிகள் தடுக்கக் கூடாது, பொதுமக்களின் வெளியேற்ற உதவுவது குறித்த உக்ரைனின் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதாக கூறினார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அதிபர் புதின், போர் குறித்த உலகளாவிய எதிர்ப்புகளை கவனிக்க நேரமில்லை என்றும், 2-வது வாரத்தில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
நடப்பது நியோ நாசிசத்தை வேரறுக்கும் போர் என்றும், ரஷ்யர்களும், உக்ரைனியர்களும் வெவ்வேறு கிடையாது எனும் நம்பிக்கை ஒரு போதும் கைவிடப் போவதில்லை என்றார். போரில் இறந்த ரஷ்ய வீரர்களின் குடும்பங்களுக்கு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையிலான உதவிகளும் வழங்கப்படும் என்றார்.