ரஷ்யாவின் வீழ்ச்சி ஆரம்பம்.. உலக நாடுகளின் தடைகள் வேலை செய்யத் துவங்கியது..!

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா பல ஆண்டுகள் திட்டமிட்டு தனது நிதி ஆதாரத்தை மேம்படுத்திக் கொண்டு உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இல்லாத போதும் நேட்டோ படைகள் உக்ரைன் நாட்டில் களமிறக்கப்பட்ட காரணத்தால் ரஷ்யா தனது பெரும் படையைக் கொண்டு உக்ரைன் நாட்டிற்குள் வேகமாக முன்னேறி வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்க்கு எதிர்ப்பு தெரிவித்த மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரம், வர்த்தகம், நிதியியல் சேவைகள் எனத் தொடர்ந்து பல தடை விதித்து வருகிறது. இதன் பாதிப்புகள் தற்போது எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. உக்ரைன் மீதான போரை தாண்டி புதின் இந்தப் பிரச்சனைகளை எல்லாம் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பது தான் தற்போது கேள்வி.

சூப்பர் சான்ஸ்.. ரூ.490 டிவிடெண்ட்.. பங்கு விலையும் அதிகரிக்கலாமாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

ரஷ்யா மீது அதிரடி தடை

ரஷ்யா மீது அதிரடி தடை

ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிதி பரிமாற்ற சேவையில் இருந்து ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை முடக்குவது வரையில் அனைத்து தடைகளை விதித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவின் மீது தடை விதிக்காத ஒன்று கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தான். இந்நிலையில் தற்போது ரஷ்யா சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் என்ன தெரியுமா..?

ரேட்டிங் குறைப்பு

ரேட்டிங் குறைப்பு

வியாழக்கிழமை மூடிஸ், பின்ச் ஆகிய ரேட்டிங் நிறுவனங்களும் ரஷ்யாவின் சவ்ரின் ரேட்டிங்-ஐ மேற்கத்திய நாடுகளின் தடையின் காரணமார ‘Junk’ என அறிவித்துள்ளது.

ரேட்டிங் குறைக்கப்பட்டதால் ரஷ்யா மற்றும் ரஷ்ய நிறுவனங்களின் முதலீட்டுக்கு மிகப்பெரிய ரிஸ்க் உருவாகியுள்ளது. லாபம் மற்றும் வருமானத்தைப் பதிவு செய்தாலும் ரேட்டிங் காரணமாக ஆபத்து அதிகமானதாகவே விளங்குகிறது.

இந்த ரேட்டிங் குறைப்பால் ரஷ்யா அரசு வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கினாலும் அதிகப்படியான வட்டியில் தான் கடன் வாங்க முடியும்.

மூடிஸ், பின்ச் ஆகியவற்றைத் தொடர்ந்து S&P அமைப்பும் ரஷ்யாவின் முதலீட்டு ரேட்டிங்கை அடிமட்டத்திற்குக் குறைத்துள்ளது.

கதவுகள் மூடல்
 

கதவுகள் மூடல்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் உலக வங்கி தனகு அனைத்து திட்டங்களையும், சேவைகளையும் “உடனடியாக” நிறுத்துவதாக உத்தரவிட்டு உள்ளது

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் ஆகியவை ஏற்கனவே முக்கிய ரஷ்ய வங்கிகளை இன்டர்பேங்க் பணப் பிரிமாற்ற அமைப்பான SWIFT இலிருந்து துண்டித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்ய மத்திய வங்கி மீது கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு உள்ளது.

முக்கியப் பாதிப்பு

முக்கியப் பாதிப்பு

ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனை தாக்கிய பிப்ரவரி 24ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் ரஷ்ய நாணயமான ரூபிள் மதிப்பு சுமார் 30 சதவீகம் சரிந்து, தொடர்ந்து சரிந்து வருகிறது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் யூரோக்கு எதிரான மதிப்பில் 123 ஆகவும், டாலருக்கு எதிராக 110 ரூபாயாகவும் சரிந்து, வரலாற்றிலேயே மிகவும் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

US, EU, UK sanctions are beginning to hurt Russia Massively; Investments rated to junk

US, EU, UK sanctions are beginning to hurt Russia Massively; Investments rated to junk ரஷ்யாவின் வீழ்ச்சி ஆரம்பம்.. உலக நாடுகளின் தடைகள் வேலை செய்யத் துவங்கியது..!

Story first published: Friday, March 4, 2022, 15:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.