வாஷிங்டன்: ரஷ்யா – இந்தியா இடையே ராணுவத் தளவடாங்கள் வர்த்தகம் சார்ந்து வலுவான உறவு இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க, கடந்த 2018-ம் ஆண்டு 5 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
ரஷ்யா மீதான அமெரிக்காவின் சமீபத்திய தீவிர பொருளாதார தடை காரணமாக இந்த வர்த்தகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதார தடையினால் இந்தியாவுக்கான ராணுவ தளவாட விநியோகம் பாதிக்கப்படாது என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவுடன் ராணுவ தளவாடங்கள் சார்ந்து இந்தியா வர்த்தக உறவு கொண்டிருப்பதால் இந்தியாவின் மீதும் பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அது குறித்து முடிவு செய்வார் என்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்தார்.