போர் நிறுத்தம் ஏற்படாமல் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது கடினமாக உள்ளதாகவும், ரஷ்யாவும் உக்ரைனும் இந்தியர்களை வெளியேற்ற பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து பேசிய அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, கார்கிவ் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்கு பகுதியில் மீட்பு பணிகளுக்கு அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.
பிசோசின் பகுதியில் 1,000 பேர் வரையும், சுமியில் 700க்கும் மேற்பட்டோரும் சிக்கியுள்ள நிலையில், சுமி பகுதியின் நிலைமை கவலை தருவதாக அவர் தெரிவித்தார். உக்ரைனில் இருந்து கடைசி இந்தியர் மீட்கப்படும் வரை ஆப்பரேஷன் கங்கா திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அரிந்தம் பக்சி கூறினார்.