கிவ்: உக்ரைம் மீதான தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிவ்வில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு பணிக்கு சென்ற மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் (MoS) ஜெனரல் வி.கே.சிங் இத்தகவலை தெரிவித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய இணை அமைச்சர் VK சிங், போலந்தில் உள்ள Rzejo விமான நிலையத்தில் வியாழக்கிழமை இந்தத் தகவலைத் தெரிவித்தார். முன்னதாக ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீவ் மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்தார். உடனடியாக அவர் உக்ரைன் கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற அவர் ‘அனைவரும் கிவ்வை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் ஏற்கனவே முன்னுரிமை அளித்துள்ளது. போரில், துப்பாக்கி தோட்டா ஒருவரது மதம் மற்றும் தேசியத்தை பார்க்காது.
மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்
போரினால் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு மத்தியில், இந்திய மாணவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து வெளியேறி, இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்புவதற்காக போலந்து எல்லையை அடைய முயற்சிக்கின்றனர். நான்கு மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய எம் சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் விகே சிங் ஆகியோர் உக்ரைனை ஒட்டியுள்ள நாடுகளில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை பல இந்திய மாணவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
முன்னதாக, கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்பவர் உக்ரைனில் உயிரிழந்தார். ரஷ்ய வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய நவீன் மேலும் சிலருடன் சேர்ந்து உணவுப் பொருட்களை வாங்க ஆளுநர் மாளிகை அருகே உள்ள கடையின் அருகே நின்று கொண்டிருந்தார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து குண்டுவீசி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய இந்த யுத்தம் விரைவில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏதும் தென்படவில்லை.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!