புதுச்சேரி-புதுச்சேரியில் நாளை துவங்கும் வேலை வாய்ப்பு முகாமிற்கு அரசு சார்பில் இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மாநில அரசு இணைந்து, நாளை 5ம் தேதி மற்றும் 6 தேதியில் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த முகாம் பிள்ளைச்சாவடியில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடக்கிறது. கவர்னர் தமிழிசை துவக்கி வைக்கிறார். முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் பங்கேற்கின்றனர்.முகாமில், தொழில்நுட்பம், கணினி அறிவியல், மென்பொருள், நிர்வாகம், மருத்துவம், வங்கி சார்ந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.பிளஸ் 2 முடித்தவர்கள் முதல், முதுகலை பட்டதாரிகள் வரை முகாமில் பங்கேற்கலாம்.முகாமில் பங்கு பெற விரும்புவோர் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மூன்று அல்லது நான்கு படிகள் வைத்துக்கொள்ள வேண்டும்.ஒருவர் குறைந்தபட்சம் மூன்று நேர்காணல்களில் பங்கேற்க முடியும்.வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்போருக்காக புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.காரைக்காலை சேர்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க வசதியாக இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement