பாகிஸ்தான் நாட்டின் மசூதி ஒன்றில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில், 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின்
பெஷாவர்
மாகாணத்தில், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில், வெள்ளிக்கிழமையான இன்று, வழக்கம் போல் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குண்டு வெடிப்பு விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வெளியானது சூப்பர் அறிவிப்பு!
இது குறித்து பெஷாவர் நகர காவல் துறை அதிகாரி இஜாஸ் அஹ்சன் கூறியதாவது:
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.