தைவான் நாட்டைச் சேர்ந்த
HTC
நிறுவனத்திற்கு ஸ்மார்ட்போன் தயாரிப்பு என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் களமாடும் பல நிறுவனங்களுக்கு மூதாதையர் தான் எச்டிசி. ஸ்மார்ட்போன்கள் என்றால் என்னவென்றே அறியாத காலகட்டமான 2004 காலவாக்கில், விண்டோஸ் இயங்குதளம் கொண்ட டச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை
எச்டிசி
தயாரித்து வந்ததை இக்காலத்தினர் அறிந்திருப்பது கேள்விக்குறிதான்.
அதனைத் தொடர்ந்து எழுந்த டெக் வளர்ச்சியின் காரணமாக, 2008ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்ட எச்டிசி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. திடமான, தரமான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்த நிறுவனத்திற்கு, போட்டி நிறுவனங்களுடன் ஈடுகொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
எச்டிசி மெட்டாவெர்ஸ் ஸ்மார்ட்போன்
இந்த தொய்வுக்கு பிறகு ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பை குறைத்துக் கொண்ட எச்டிசி நிறுவனம், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய விர்சுவல் ஹெட்செட் தயாரிப்பில் முனைப்பு காட்டியது. இச்சூழலில், இந்நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Metaverse Rape: மெட்டாவெர்ஸ் உலகில் என்னை சீரழித்துவிட்டனர் – பெண் பகீர் புகார்!
அதுவும் சாதாரன போன் எல்லாம் இல்ல. மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் களமிறக்கவுள்ளது. இது டெக் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை போலவே விவெர்ஸ் ‘
ViVerse
’ எனும் தொழில்நுட்பத்திற்கு எச்டிசி காப்புரிமை வைத்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தான் எச்டிவி விஆர் ஹெட்செட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதே ஆராய்ச்சி பட்டறையில் இருந்து தான் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளிவர இருக்கிறது.
ஸ்மார்ட்போனுக்கு இது புதுசு
இந்த போன் சில அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை GSM Arena உறுதி செய்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கூகுள், சாம்சங் போன்ற பெரு நிறுவனங்களே இது போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்க முயற்சித்து தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
எனினும், மேற்குறிப்பிட்ட டெக் நிறுவனங்கள் மெட்டாவெர்ஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பு குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சமயத்தில், எச்டிசி நிறுவனத்தின் புதிய அறிவிப்பு டெக் நிறுவனங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Metaverse’ல் நிலம் வாங்கி தியேட்டர் கட்டிய தயாரிப்பாளர்!
2010 காலத்தில், சிலிக்கான் வேலி டெக் ஜயண்டான ஆப்பிள், எச்டிசி மீது 20 வழக்குகளை தொடர்ந்தது. இந்த வழக்குகள் அனைத்தும் காப்புரிமை தொடர்பான வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் புகார் பொய் என்று எச்டிசி தரப்பில் வாதிடப்பட்டது.
டெக் சந்தையில் உள்ள நிறுவனங்கள் கேமரா, பேட்டரி, டிஸ்ப்ளே போன்றவற்றிற்கு முன்னுரிமை அளித்து வரும் வேளையில், HTC நிறுவனத்தின் இந்த படைப்பு புதிய தொழில்நுட்பங்களை சார்ந்த புதிய தயாரிப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
Read More:
டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம் – மார்ச் 3 புதிய OLED டிவிக்கள் அறிமுகம்!
Apple Event 2022: iPhone SE 3, M2 சிப்கள் அறிமுகமாவதாகத் தகவல்
iPhone-ஐ மிஞ்சும் கேமரா… Oppo Find X5 Pro 5G