Moto குடும்பத்தின் G22 ஸ்மார்ட்போன் வெளியீடு – பயனர்களை கவரும் புதிய டிசைன்; 4 ரியர் கேமரா!

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு பெயர்போன
மோட்டோரோலா
நிறுவனம், புதிய போனை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோ ஜி
தொகுப்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டோரோலா ஜி22 ஸ்மார்ட்போன் உலகளவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் கூடிய குவாட் கேமரா, 5000mAh பேட்டரி திறன், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியன சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி22 அம்சங்கள்

மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போனில் 6.5″ அங்குல 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி37 ஆக்டாகோர் புராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. GE8230 கிராபிக்ஸ் எஞ்சின் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம், 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி ஆதரவை ஜி22 கொண்டுள்ளது.

டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம் – மார்ச் 3 புதிய OLED டிவிக்கள் அறிமுகம்!

மோட்டோ ஜி22 கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சல் கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் f/2.4 கேமரா டிஸ்ப்ளே டாட் நாட்சில் பொருத்தப்பட்டுள்ளது. பேஸ் பியூட்டி போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செயலி உள்ளது.

மோட்டோ ஜி22 பேட்டரி

ப்ளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஜாக், டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுடன் மோட்டோ ஜி22 போன் இருக்கிறது. 1TB வரை ஸ்டோரேஜை நீட்டிக்க எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. இதனை ஊக்குவிக்க 15W பாஸ்ட் சார்ஜர் போனுடன் வழங்கப்படுகிறது.

இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் Vs ரியல்மி லேட்டஸ்ட் 5ஜி போன் ஒப்பீடு – இதில் எந்த மொபைல் சிறந்தது?

மோட்டோ ஜி22 விலை

புதிய மோட்டோ போன், காஸ்மிக் பிளாக், ஐஸ்பெர்க் ப்ளூ, பெர்ல் வைட் ஆகிய மூன்று வண்னத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளியீட்டின் போது, ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.14,000ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனம் இதுவரை ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட குறைந்த விலை பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை, பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
மோட்டோவின் பவர்ஃபுல் Moto Edge 30 Pro போன் விலை இவ்வளவு தானா!

Read More:
டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘Nothing’ டீஸர்! Poco X4 Pro போன் இருக்க வேற என்ன வேணும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.