Ukraine News: உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது’ ரஷ்ய ராணுவம் அனைத்து பகுதிகளிலும் தாக்குவதால் அபாயம் நிலவுகிறது. அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். அணுமின் நிலையத்தில் தாக்குதலை நிறுத்த ரஷ்யாவிற்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தகவல்!
உக்ரைனில் உள்ள ரஷ்ய குடிமக்களின் சொத்துக்களை முடக்கம்!
உக்ரைனில் உள்ள ரஷ்ய குடிமக்களின் சொத்துக்களை முடக்கும் சட்டத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக மாணவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு சார்பில் சிறப்பு குழு!
தமிழக மாணவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவிற்கு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 193 மாணவர்கள் மட்டுமே தாய்நாடு திரும்பி உள்ளனர். உக்ரைனில் இருந்து அழைத்துவரப்படும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Ukraine News Live Updates
உக்ரைன் – ரஷ்யா.. விரைவில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
பெலாரசில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக சூழல் எட்டப்படாத நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிருப்தி. உடன்பாடு எட்டப்படாததால் விரைவில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்
ரஷ்யா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 35%ஆக நிர்ணயம்!
ரஷ்யா மற்றும் பெலாரஸ் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 35%ஆக நிர்ணயித்து கனடா அரசு அறிவித்துள்ளது.
செர்னிஹிவ் நகரின் மீது தாக்குதல்.. 9 பேர் உயிரிழப்பு!
உக்ரைனின் வடக்கு பகுதி நகரமான செர்னிஹிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக செர்னிஹிவ் கவர்னர் தகவல்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தஞ்சையின் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த வேட்பாளர் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார்
மதுரை மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து வேட்புமனு தாக்குதல் செய்த பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி அடைந்துள்ளனர்.
கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி.
திருச்சி மேயராக திமுகவின் அன்பழகன், சேலம் மேயராக திமுகவின் இராமச்சந்திரன், திருப்பூர் மேயராக திமுகவின் தினேஷ்குமார், ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவின் உதயகுமார், கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக காங்கிரஸைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வழக்கறிஞர் மகேஷ், பாஜக சார்பில் மீனாதேவ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுக வேட்பாளர் இளமதி, மதுரை மாநகராட்சியின் மேயராக திமுக வேட்பாளர் இந்திராணி, தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி, கோவை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்!
சென்னை மாநகராட்சி மேயராக முதுகலை பட்டதாரி பிரியா(28) பதவியேற்றார். அவருக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
சென்னைக்கு தென் கிழக்கில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் ஆவின் பொருட்களான நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், நகர மன்றத் துணைத் தலைவராக போட்டியிடும், சிபிஎம் கட்சி வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பாக போட்டியிடும் பிரியா, மனுத்தாக்கல் செய்ய ரிப்பன் மாளிகை வருகை தந்துள்ளார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்களும் வருகை தந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 201 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வில் வென்ற 3,800 பேர் எழுத உள்ளனர். 66 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைக்க சில நிர்வாகிகள் ஒ.பி.எஸ்-இடம் கோரிக்கை விடுத்த நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து’ ஆலோசிக்க நாளை நடக்கவிருந்த தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை அமர வைப்பது அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும். பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் செயல்படக் கூடாது. புகார் வரும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் 190வது அவதார தின விழாவையொட்டி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்ப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் உடன் நாளை மறுநாள் மோதுகிறது.
தமிழகத்தில் 21 மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா முதன் முறையாக களமிறங்க உள்ளார். விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டி. முதல் டெஸ்ட் போட்டியை காண மைதானத்தில் 50% ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனை தொடர்ந்து அண்டை நாடுகளான மால்டோவா மற்றும் ஜார்ஜியா நாடுகளும், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இணைய விண்ணப்பம் கொடுத்ததால் ரஷ்யா அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விமான எரிபொருளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. டெல்லியில் தற்போது ஒரு கிலோ லிட்டர் பெட்ரோல் ரூ.93,530 ஆக உள்ளது. இது பிப்ரவரி மாத விலையை விட இது 9% அதிகம்!
உக்ரைனில் உள்ள மேலும் 7,400 இந்தியர்கள் அடுத்த 2 நாட்களில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போருக்கு எதிரான கருத்துகள் எழுவதால், ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கி ரஷ்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது!
உக்ரைன் மக்களுக்கு அடுத்த 18 மாதங்களுக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைன் வான்வெளியை நேட்டோ அமைப்பு மூட வேண்டும். முடியாவிட்டால் உக்ரைனுக்கு விமானங்களை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ருமேனியாவில் இருந்து சி17 ரக போர் விமானம் மூலம் மேலும் 210 இந்தியர்கள் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தனர். அவர்களை பாதுகாப்பு துறை இணை அதிகாரி அஜய் பட் வரவேற்றார்.
உக்ரைனிலிருந்து பொதுமக்களை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் பொதுமக்கள் அனுபவிக்கும் அவல நிலைக்கு உக்ரைன் அரசு தான் காரணம் என ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டியுள்ளது.
அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் ஒரே நாடு இந்தியாதான். மத்திய அரசு மூத்த அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மீட்பு பணிக்கு அனுப்பியுள்ள நிலையில் சிறப்பு குழுவின் தேவை என்ன? என தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
2023 சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்!