வியன்னா: உக்ரைன் -ரஷ்ய போர் அதிகரித்துள்ளதையடுத்து அணுக்கதிர் கசிவைத் தடுக்க சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள் உக்ரைன் விரைந்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச அணு ஆயுத சோதனை ஏஜென்சியின் இயக்குனர் ரஃபேல் க்ரோஸி ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த 1986-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஆட்சி காலத்தில் ரஷ்யாவுடன் இணைந்து இருந்தது. அப்போது செர்னொபில் (Chernobyl) என்கிற கீவ் நகரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உக்ரைன் நகர் ஒன்றில் அணு ஆயுத சோதனை கூடத்தில் விபத்து ஏற்பட்டது.
உலகின் மிக மோசமான அணு ஆயுத சோதனை விபத்தாக இது அப்போது கருதப்பட்டது. இதில் 100 பேர் அணுக்கதிர் தாக்கி மரணம் அடைந்தனர். இதனை அடுத்து எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படக் கூடாது என்கிற நோக்கில் பிற்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து பிரிந்தவுடன் இந்த நகரில் பாதி இடத்தில் மக்கள் குடியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஓர் எதிர்பாராத விபத்தால் உக்ரைனில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைன் – ரஷ்ய போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய அணு ஆயுத சோதனை கூடம் அமைந்துள்ள உக்ரைன் நகரமான சேபோர்சேயா நகரத்தில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மீண்டும் இதேபோல அணு கதிர்கள் வெளியே கசிந்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாவது நிச்சயம். இந்த அசம்பாவிதத்தை தடுக்கவும் சேபோர்சேயா நகரத்தில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவதை தடுக்கவும் சர்வதேச அணு ஆயுத அமைப்பு உறுப்பினர்கள் உக்ரைனுக்கு சென்று சேபோர்சேயா பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Advertisement