அவசரப்பட்டுடீங்களே புடின் – உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அதிரடி முடிவு!

அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களின் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகிறது. உக்ரைன் ராணுவ வீரர்களும் பின்வாங்காமல் நாட்டை காக்கத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த சூழலில், டெக் நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் கோரிக்கை வைத்திருந்தது. இதற்கு சிலிக்கான் வேலியின் பல பெரும் டெக் நிறுவனங்கள் செவி சாய்த்துள்ளது. சமூக வலைத்தளங்கள், அண்டை நாடுகள் என உக்ரைனுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

சமூக வலைத்தளங்களுக்குத் தடை

என்ன தான் பெருவாரியான மக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்தாலும், உக்ரைனுக்கு உதவ முக்கிய நாடுகள் தயக்கம் காட்டுகிறது. பின்விளைவுகளை யோசித்து அகண்ட கால் வைக்க வேண்டாம் என அமெரிக்க போன்ற நாடுகள், ரஷ்யா மீது சில தடைகளை மட்டும் விதித்துவிட்டு அமைதியாக இருக்கிறது.

ரஷ்யா மீது நடவடிக்கை எடுங்கள் – டெக் ஜாம்பவான்களிடம் கோரிக்கை வைத்த உக்ரைன்!

இந்த நிலையில், ரஷ்யா தன் பக்கத்தில் நியாயம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. முக்கியமாக ரஷ்ய அரசின் பிரத்தியேக செய்தி நிறுவனம் RT மற்றும் ஸ்புட்னிக் போன்ற தொலைக்காட்சிகள் இதைத் தொடர்ந்து செய்து வருகிறது.

இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் சமூக வலைத்தள பக்கங்களை பேஸ்புக் முடக்கியது. இதனால் கடுப்பான ரஷ்ய விளாடிமிர் புடின் அரசு, ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் ரஷ்யாவில் செயல்படத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா அதிரடி

இதுமட்டுமில்லாமல், உலகின் மிகப்பெரும் செய்தி ஊடகமான பிபிசி-க்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கூற்றுப்படி, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாகத் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் செயல்படுவதாகவும், இந்த நிறுவன தளங்களில் உக்ரைனுக்கு ஆதரவாகப் பெருவாரியான பதிவுகள் போடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, ரஷ்ய ராணுவம் குறித்து வதந்தி பரப்புவோருக்கு, 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டத்தில் அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும் எனவும் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போரைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டுகோள்

உள்ளூர் அளவில் தற்காலிகமாகப் போரை நிறுத்தி வைக்க, இரு நாடுகளிடமும் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மக்களை மீட்க இதை உடனடியாக செய்தாக வேண்டும் என தனது கோரிக்கையில் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

Russia Ukraine News: உக்ரைன் பெண்களை Tinder-இல் டேட்டிங்கிற்கு அழைக்கும் ரஷ்ய ராணுவத்தினர்!

இந்திய மாணவர்களை மீட்க ரஷ்ய அரசு 130 பேருந்துகள் ஏற்பாடு செய்திருந்தாலும், அவர்கள் உள்ள இடத்திலிருந்து 50 கிலோமீட்டருக்கும் மேல் பயணித்தே பேருந்துகளை அடைய முடியும். போர் சூழலில் அது பாதுகாப்பாக இருக்காது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பரபரப்பான சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி, “ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இதுவரை 10 ஆயிரத்து 500 பேர் 48 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். பயங்கரமாகப் போர் நடக்கும் கிழக்கு உக்ரைனில் 3 ஆயிரம் இந்தியர்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்ய கணினிகளை துவம்சம் செய்ய ஹேக்கர்கள் முடிவு; உக்ரைனுக்கு ஆதரவு!

தொடர்ந்து பேசிய அவர், “ரஷ்யா கைப்பற்ற முனையும் கார்கிவ், சுமி ஆகிய பகுதிகளில் மட்டும் 1000 பேர் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்களை மீட்க வேண்டும் என்றால், தற்காலிகமாக போர் நிறுத்தப்பட வேண்டும். இதற்காக இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

Read more:
ரஷ்யா உக்ரைன் போர்: மக்கள் பாதுகாப்புக்காக பேஸ்புக், ட்விட்டர் எடுத்த முடிவு!ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகளை குறிவைக்கும் ரஷ்யா..பாதுகாப்பாக இணையத்தில் உலாவ சிறந்த VPN-கள்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.