ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகின்றது. ஏற்கனவே இதன் தாக்கத்தினை உணர ஆரம்பித்துள்ள உலக நாடுகள், போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும் இது எதனையும் செவி சாய்க்காத ரஷ்யா, தொடர்ந்து தாக்கத்தினை தொடர்ந்து வருகின்றது.
இந்த தொடர் தாக்குதலின் மத்தியில் பல்வேறு பிரச்சனைகளும் எழுந்து வருகின்றன.
குறிப்பாக கார்ப்பரேட் இந்தியாக்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன.
ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் – ரஷ்யா மோதல் தான் காரணம்..!
உலோகங்கள் விலை உச்சம்
சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே பல உலோகங்களின் விலையானது உச்சம் தொட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வந்த நாடுகள், தற்போது தான் மீளத் தொடங்கியுள்ளன.
மூலதன பொருட்கள் விலை உச்சம்
இதன் காரணமாக தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் நிலவி வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் மூலதன பற்றாக்குறை நிலவி வருகின்றது. ஏற்கனவே பற்பல காரணிகளுக்கும் மத்தியில், மூலதன பொருட்கள் விலையானது பலமடங்கு உச்சத்தினை எட்டியுள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல் உள்ளிட்ட உற்பத்தி துறைகளில் பெரும் தாக்கத்தின ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டீல் விலை
இந்த நிலையில் தற்போது ஸ்டீல் விலையானது உச்சம் தொட்டுள்ளது. இதுவும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போர் தொடங்கியதில் இருந்து, சர்வதேச சந்தையில் ஸ்டீல் விலையானது கணிசமான உச்சத்தினை எட்டியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய சந்தைகளில் 15% வரை அதிகரித்துள்ளது.
இந்தியர்களுக்கு பாதிப்பு
அடுத்து வரும் சில வாரங்களுக்கு ஸ்டீல் விலை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுங்க வரி இதற்கு 7.5% வசூலிக்கப்படும் நிலையில், இதனுடன் செஸ் வரி, லாகிஸ்டிக்ஸ் கட்டணங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பலவும் விலையில் எதிரொலிக்கலாம். ஏற்கனவே விலையும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், அவற்றுடன் சேர்த்து இந்த கட்டணங்களையும் இந்தியாவில் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் இந்திய இறக்குமதியாளர்கள் கூடுதலாக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விலையை உயர்த்தலாம்
விலை அதிகரித்து வரும் அதேசமயம் இந்தியாவில் தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஸ்டீல் நிறுவனங்கள் நிச்சயம் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். குறிபாக பொதுத்துறை நிறுவனமான செயில், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.பி.எல் உள்ளிட்ட நிறுவனங்களும் இங்கு விலையை உயர்த்தலாம்.
விலை எவ்வளவு அதிகரிக்கும்
ஏற்கனவே மேற்கண்ட நிறுவனங்களில் சில ஸ்டீல் விலையானது ரகங்களுக்கு தகுந்தவாறு டன்னுக்கு 2000 – 2500 ரூபாய் என்ற அளவுக்கு விலையை உயர்த்தியுள்ளன. இதில் HRC விலையானது டன்னுக்கு 68000 ரூபாய் என்ற லெவலில் உள்ளது. இது விரைவில் இன்னும் இரண்டு முறை விலை அதிகரிப்பினை காணலாம். இது டன்னுக்கு 2000 ரூபாய் என்ற அளவில் கூட இருக்கலாம், இது மார்ச் 10க்குள்ளாக இருக்கலாம் என்றும் JSPL நிறுவனத்தின் நிர்வாக தலைவர் விஆர் சர்மா கூறியுள்ளார்.
போருக்கு பின்பும் கஷ்டகாலம் தான்
ஆதாரங்களின் படி, ரஷ்யாவும் உக்ரைனும் சேர்ந்து சர்வதேச சந்தைகளில் சுமார் 40 மில்லியன் டன் இரும்பினை வழங்கி வருகின்றன. ரஷ்யா – உக்ரைன் மத்தியில் நிலவி வரும் பதற்றத்தின் மத்தியில், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடையாலும், போருக்கு பின்பு இவ்விரு நாடுகளும் ஏற்றுமதியினை தொடங்கினாலும், எதிர்காலத்தில் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவது இருவருக்குமே கடினமாக இருக்கும்.
இந்திய துறைக்கு வாய்ப்பு
இவ்விரு நாடுகளுமே தாங்கள் செய்யும் ஏற்றுமதியினை பெரும்பாலும் ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களில் ஒரு டன்னுக்கு 100 – 150 யூரோக்கள் அதிகரித்து, 1150 யூரோக்களாக உள்ளது. இதே இந்தியாவில் ஸ்டீல் சந்தையில் 100 டாலர்கள் வரை குறைவாக உள்ளது. இது இந்திய இரும்பு துறைக்கு அதிக ஏற்றுமதி செய்ய வழிவகுக்கலாம்.
தேவை அதிகரிக்கலாம்
அதிகரித்து வரும் மூலதன பொருட்கள் விலை, நிறுவனங்களின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக தேவை அதிகரித்து வரும் நிலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக உள்கட்டமைப்பு துறையில், குறிப்பாக கட்டிடங்கள், பைப்லைன், எம்.எஸ்.எம்.இக்கள் துறையில் தேவை அதிகரிக்கலாம். இதனால் ஸ்டீல் விலை அதிகரிக்கலாம். எப்படியிருப்பினும் ஏற்றுமதி வாய்ப்புகள் இந்தியாவிக்கு அதிகரிக்கலாம் என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
Happy news! Opportunity awaits India steel companies in crisis
Happy news! Opportunity awaits India steel companies in crisis/இந்திய நிறுவனங்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. நெருக்கடியிலும் ஹேப்பி நியூஸ்!