இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா மற்றும் வேலை வாய்ப்பு மோசடிகள் தொடர்பான அறிவிப்பை நியூசிலாந்து வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களை குறிவைத்து நியூசிலாந்திற்கு மோசடியான விசா மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பல அறிக்கைகள் கிடைத்துள்ளதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மோசடிகள் குறித்து சந்தேகிக்கும் இலங்கையர்கள் நியூசிலாந்தில் உள்ள நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திரமான சட்ட ஆலோசனையைப் பெறவும் அல்லது இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை எழுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் நியூசிலாந்து விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான மூன்று முக்கிய வழிமுறைகள் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்து விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான மூன்று முக்கிய வழிமுறைகள்