கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப்படுவதற்கு அதன் தனித்துவம் வாய்ந்த சுவை மட்டும் காரணம் அல்ல, அதன் மருத்துவ குணங்களும் தான்.
கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முர்யா கோயினீகி. அதன் சொந்த ஊர் இந்தியா மற்றும் இலங்கை ஆகும்.
இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன. வைட்டமின் சி, ஏ, பி மற்றும் ஈ உள்ளிட்ட வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.
ஆல்கலாய்டுகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றன. எல்லாவிதமான உடல் பிரச்னைகளையும் சரி செய்யக் கூடிய ஒரு வீட்டு மருத்துவ பொருள் கறிவேப்பிலை என்றால் அது மிகையில்லை.
இளநரை, முடி உதிர்வு மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை ஆகியவற்றை சரிசெய்யக் கூடியது. வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றை கறிவேப்பிலை சரிசெய்துவிடும்.
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி பாக்டீரியல் குணம் வயிற்றில் எந்த ஒரு நோய் தொற்றுக்களையும் வைத்துக் கொள்ளாது. இது வயிற்றில் உள்ள பித்தத்தைக் குறைத்து வயிற்றை சுத்தம் செய்து வயிற்று கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்துவிடும்.