உக்ரைனில் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கு, சேதங்களுக்கும் நேட்டோவின் பலவீனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாக இருக்கும் என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்துவதை தடுக்கவும், தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் செலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்தது.
இந்நிலையில்,தனது கோரிக்கையை நிராகரித்தது மூலம் உக்ரைன் மீது மேலும் குண்டு மழை பொழிய நேட்டோ அனுமதித்துள்ளதாக செலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.
தற்போதைய போரில் உக்ரைன் தாக்குப்பிடிக்காவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளும் நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
செலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றால் ஐரோப்பா முழுவதும் போர் பரவும் நிலை ஏற்படும் என்பதால் அதை நிராகரித்ததாக நேட்டோ தலைவர் ஸ்டால்டன்பர்க் விளக்கம் அளித்துள்ளார்.