உக்ரைன் தலைநகர் கிவ் மருத்துவமனையில் குண்டுக்காயத்துடன் சிகிச்சை பெறும் இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் இந்திய தூதரகம் தனது அழைப்பை ஏற்கவில்லை என்றும் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் புகார் கூறியுள்ளார்.
உயிரிழந்த பிறகு மீட்பு விமானம் அனுப்பி என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய அவர் தமக்கு மறுபிறவி கிடைத்திருப்பதால் தாம் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.
சக்கர நாற்காலி போன்ற உதவிகளை வழங்கி இந்தியா அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை எழுப்பியுள்ளார். இதனிடையே காயம் அடைந்த மாணவரின் அனைத்து மருத்துவ பயணச் செலவுகளை ஏற்பதாக மத்திய அரசுஅறிவித்துள்ளது.