உக்ரைன் கைக்கு வந்த "அமெரிக்க ஏவுகணை".. 200 ரஷ்ய பீரங்கிகள் காலி.. உக்கிரமாகும் யுத்தம்!

கைகளால் ஏவி பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் அமெரிக்க ஏவுகணைகளை தற்போது உக்ரைன் படையினர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் ரஷ்யாவின் பீரங்கிப் படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின்
ஜாவலின் ஏவுகணைகள்
உக்ரைன் படையினர் வசம் வந்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி ரஷ்ய பீரங்கிகளை தாக்கி அழிக்க ஆரம்பித்துள்ளனர் உக்ரைன் ராணுவத்தினர். மிகவும் எளிமையாக கையாளக் கூடிய அதி நவீன ஏவுகணைதான் இந்த ஜாவலின்.

அதாவது கையாலே இதை டார்கெட்டை நோக்கி ஏவித் தாக்க முடியும். எந்த இடத்திலிருந்தும் இதைப் பயன்படுத்த முடியும். இந்த ஏவுகணைகள் கிடைத்திருப்பதால் உக்ரைன் படையினர் உற்சாகமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 300 ஏவுகணைகளை ஏவி 250க்கும் மேற்பட்ட ரஷ்ய பீரங்கிகளை உக்ரைன் படையினர் தாக்கி அழித்துள்ளனராம். இத்தகவலை அமெரிக்க பத்திரிகையாளர் ஜேக் மர்பி தெரிவித்துள்ளார். அமெரிக்க சிறப்பு படையினரிடமிருந்து இந்தத் தகவலைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரேதியான் மிஸைல்ஸ், டிபன்ஸ் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த ஏவுகணைதான் இந்த ஜாவலின். ஜாவலின் ஏவுகணைகள் செயல்படும் விதமே சுவாரஸ்யமானது. கவச வாகனம் என்று அழைக்கப்படும் பீரங்கிகளின் மேல் பகுதி மிகவும் பலவீனமானதாக இருக்கும், பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருக்கும். அதேசமயம், அதன் பக்கவாட்டுப் பகுதிகள் சுற்றுப் பகுதிகள் மிகவும் வலுவானதாக இருக்கும். ஜாவலின் ஏவுகணைகள் பீரங்கிகளின் மேல் பகுதியைத்தான் துல்லியமாக தாக்கும். இதன் மூலம் அந்த பீரங்கிக்கு மிகப் பெரிய சேதத்தை ஏவுகணையால் ஏற்படுத்த முடியும்.

எல்லோரும் பயந்தது நடக்கப் போகுது.. முழு வீச்சில் உக்ரைனைத் தாக்கத் தயாராகும் ரஷ்யா

2018ம் ஆண்டு உக்ரைனுக்கு ஜாவலின் ஏவுகணைகள் கொடுக்கப்பட்டன. ஏவுகணைகள் மட்டுமல்லாமல் உரிய பயிற்சிகளையும் அமெரிக்கா கொடுத்தது. இது 75 மில்லியன் டாலர் ராணுவ ஒப்பந்தமாகும் என்றும் ஜேக் கூறியுள்ளார்.

ஒரு வீரர் தனியாகவே இந்த ஏவுகணையைக் கொண்டு சென்று கையாள முடியும். அதேசமயம், ஏவுகணையின் டியூப் பகுதியை் பிடித்துக் கொள்ள ஒருவர் தேவைப்படுவார். அதிகபட்சம் 2 பேர் போதுமானதாகும். உக்ரைன் படையினர் ஜாவலின் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவதால் ரஷ்யா தனது டி 72 ரக பீரங்கிகளை போர் முனையிலிருந்து வாபஸ் பெற்று வருகிறதாம்.

ஜாவலின் ஏவுகணைகள் தவிர அமெரிக்காவின் பல்வேறு ஆயுதங்களையும் உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பாக உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஓலஸ்கி ரெஸ்னிகோவ் கூறுகையில், மேற்கத்திய நாடுகளிடமிருந்து குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து அதி நவீன ஆயுதங்கள் வந்து கொண்டுள்ளன. நாங்கள் மிகச் சிறப்பாக போரை கையாளுவதை அமெரிக்கர்களே பாராட்டியுள்ளனர். ஜாவலின் மட்டுமல்லாமல் ஸ்டிங்கர்கள் வருகின்றன. டர்க்கிஷ் டிரோன்களும் வந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

உக்ரைனை விட்டு ஜெலன்ஸ்கி தப்பிச்சுப் போயிட்டாரா?.. இந்த வீடியோவைப் பாருங்க!

பேரேட்கர் டிபி2 என்ற டிரோனை உக்ரைன் தற்போது பயன்படுத்தி வருகிறது. இந்த டிரோன் 24 மணி நேரம் தொடர்ந்து வான்வெளியில் பறக்கக் கூடிய வல்லமை படைத்தது. மேலும் பீரங்கிகளைக் குறி வைத்துத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் இதில் பொருத்தி அனுப்பலாம். அதேபோல இந்த டிரோனில் சிறிய ரக குண்டையும் பொருத்தி அனுப்பி தாக்குதல் நடத்த முடியும்.

இந்த டிரோன்களை வைத்துத்தான் ரஷ்யாவின் வாகன அணிவரிசையையும் உக்ரைன் தாக்கி வருகிறது. ஜாவலின் மட்டுமல்லாது ஸ்டிங்கர்களும் கூட அமெரிக்க தயாரிப்புதான். ஜாவலின் என்பது பீரங்கிகளைத் தாக்கி அழிக்கக் கூடிய லாஞ்சர்கள். ஸ்டிங்கர்கள் என்பது தோள் பட்டையில் வைத்து ஏவுகணைகளை ஏவி விமானங்களை அழிக்கக் கூடியதாகும். மொத்தத்தில் இப்போது அமெரிக்க ஆயுதங்களுடன் மோதிக் கொண்டுள்ளது ரஷ்யா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.