உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு தப்பி செல்லவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெலன்ஸ்கி உக்ரைனை விட்டு தப்பி ஓடிவிட்டார். Lviv நகரில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என உக்ரைன் எம்.பி-க்கள் கூறினார்.
ரஷ்யப் படைகளின் முதல் விரோதி என்று குறிவைக்கப்பட்டிருக்கும் ஜெலன்ஸ்கி தமது குடும்பத்தினருடன் போலந்து நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதே போல ரஷ்ய நாடாளுமன்றத்திலும் சபாநாயகர் தமது உரையில், ஜெலன்ஸ்கி அண்டை நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாகக் கூறினார்.
இதனால் ஜெலன்ஸ்கி தனது குடும்பத்தாருடன் உண்மையில் உக்ரைனில் தான் இருக்கிறாரா இல்லை தப்பி சென்றுவிட்டாரா என்ற குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜெலன்ஸ்கி இன்னும் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தான் இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் குழப்பங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.