உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷியா இன்று அறிவித்துள்ளது. ஆனால் நேற்றுவரை தொடர்ந்து 10 நாட்களாக உக்ரைன் மீது ரஷியா உக்கிரமாக தாக்குதலை தொடர்ந்து நடத்தி வந்தது.
நேட்டோ அமைப்பில் உள்ள நேச நாடுகளிடமிருந்து ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவமும் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வந்தது.
இதனால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ரஷியாவின் தாக்குதலில் இதுவரை உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் எவ்வளவு பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து ஐ.நா.சபை அளித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஊரெல்லாம் உக்ரைன் பக்கம் திரும்பியிருக்க.. வட கொரியா என்ன பண்ணிட்டிருக்கு பாருங்க!
ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை உக்ரைன் நாட்டை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வருகிற 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.