உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியிலும் சீனாவின் பலே திட்டம்.. இப்ப கூட இப்படி தானா?

இன்றைய காலகட்டத்தில் கோதுமை உணவு பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகின்றது. இத்தகைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் கோதுமையின் விலையானது 2008க்கு பிறகு மீண்டும் மிக மோசமான விலையேற்றத்தினை கண்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உக்ரைன் சர்வதேச அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும்.

ரஷ்யாவின் வீழ்ச்சி ஆரம்பம்.. உலக நாடுகளின் தடைகள் வேலை செய்யத் துவங்கியது..!

விலை 40% அளவுக்கு ஏற்றம்

விலை 40% அளவுக்கு ஏற்றம்

இதற்கிடையில் தான் கோதுமை விலையானது 2008க்கு பிறகு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கிடையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு விலையானது 40% அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

லாகிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து பாதிப்பு

லாகிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து பாதிப்பு

உக்ரைன் போரின் மத்தியில் பல முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் லாகிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து துறையானது இணைப்புகளை துண்டித்துள்ளது. இந்த போர் பதற்றத்தின் மத்தியில் அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே ரஷ்யாவுடனான வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா இன்சூரன்ஸ் மற்றும் சரக்கு செலவினங்களையும் தவிர்த்து வருகின்றது.

விலை தொடர் ஏற்றம்
 

விலை தொடர் ஏற்றம்

ரஷ்யா – உக்ரைனும் மக்காச்சோளம், சூரியகாந்தி எண்ணெய்உள்ளிட்ட பலவற்றிலும் முக்கிய சப்ளையர்களாக உள்ளன. மக்காச்சோளம் 2012க்கு பிறகு உச்சத்தினை எட்டியுள்ளது. சோயாபீன் மற்றும் பால்ம் ஆயில் வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளன. இதற்கிடையில் சோளம் மற்றும் கோதுமையை அதிகளவில் இறக்குமதி செய்யும் சீனா, அத்தியாவசிய பொருட்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விலையை தூண்டலாம்

விலையை தூண்டலாம்

இது தொடர்ந்து அதிகரித்து வரும் விலைக்கு மத்தியில், விலையேற்றத்தில் இருந்து தங்களை பாதுகாக்க பயன்படும் என திட்டமிட்டு வருகின்றது. இது மேற்கொண்டு விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். அதிகரித்து வரும் பதற்றம், மத்திய வங்கிகளின் நடவடிக்கை உள்ளிட்ட பலவும் உணவு பணவீக்கத்தினை தூண்டுகின்றது. இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் மத்திய வங்கிகளில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.

சீனாவில் நடவடிக்கை

சீனாவில் நடவடிக்கை

இதற்கிடையில் சீன இறக்குமதியாளர்கள் சமீபத்தில் அமெரிக்க சோயாபீன்ஸை 20 கார்கோவும், 10 முறை மக்காச்சோளத்தினையும் முன் பதிவு செய்துள்ளனர். ஆக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கும் மத்தியில், சத்தமே இல்லாமல் பொருட்களை வாங்கி பதுக்க தொடங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China imports large quantities of wheat and corn amid Ukraine-Russia crisis.

China imports large quantities of wheat and corn amid Ukraine-Russia crisis./உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியிலும் சீனாவின் பலே திட்டம்.. இப்ப கூட இப்படி தானா?

Story first published: Friday, March 4, 2022, 16:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.